மலையகத்தில் திருக்குறள் வழியில் நூதன திருமண நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது.
ஹட்டன் – காசல்ரீ பகுதியில் இந்த நூதன திருமண நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
மணமகன் கையில் திருக்குறள் நூலை தாங்கியும், மணமகள் திருவள்ளுவர் சிலையை தாங்கியும் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
சிறுவர்கள் திருக்குறள்கள் எழுதப்பட்ட சிறு பதாகைகளை தாங்கி, புதுமணத் தம்பதியினரை வரவேற்வேறனர்.
வழமையான திருமண சடங்குகள் நிறைவுற்றதன் பின்னர், இந்த திருக்குறள் வழி திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது.
செல்வன் த.திருச்செந்தூரன் மற்றும் செல்வி கு.தர்ஷினி தம்பதியினர் இவ்வாறு திருக்குறள் வழி திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் திருக்குறட்பாக்கள் ஓதப்பட்டன, தம்பதியினர் திருக்குறள் வழியில் திருமண பந்தத்தில் இணைவது குறித்த உறுதிமொழிகளை மேற்கொண்டனர்.
மலையக கல்வியியலாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்ட பலரும் இந்த தம்பதியினருக்கு தங்களது வாழ்த்துக்களைத் நேரில் தெரிவித்திருந்தமை சிறப்பம்சமாகும்.
மேற்கத்தைய நவீன கலாச்சார நெறி மரபுகளை பின்பற்றி திருமண நிகழ்வுகள் நடந்தேறும் இந்தக் காலப் பகுதியில் திருக்குறள் வழியில் மலையகப் பகுதியில் திருமண நிகழ்வு நடைபெற்றமை அனைவரினாலும் பாராட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.