சாதாரணதர பரீட்சைகள் இன்று ஆரம்பம்

262 0

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (2021 ஆம் ஆண்டுக்கான) பரீட்சைகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளன.

இன்று (23) முதல் ஜூன் முதலாம் திகதி பரீட்சைகள் இடம்பெறவுள்ளது.

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு டிசம்பரில் நடத்தப்பட்டிருக்க வேண்டிய பரீட்சைகள் 5 மாதங்கள் காலம் தாழ்த்தப்பட்டு அடுத்த வாரம் இடம்பெறவுள்ளன. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய நாளை பரீட்சைகள் ஆரம்பமாகி ஜூன் முதலாம் திகதி நிறைவடையும்.

இம்முறை பாடசாலை ஊடாக 4 இலட்சத்து 7 ஆயிரத்து 129 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.
<p>அதேபோன்று ஒரு இலட்சத்து 10 ஆயிரத்து 367 தனியார் பரீட்சாத்திகளும் பரீட்சைக்கு தோற்றுகின்றனர். அதற்கமைய இம்முறை ஒட்டுமொத்தமாக 5 இலட்சத்து 17 ஆயிரத்து 496 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

இதற்காக நாடளாவிய ரீதியில் 3,844 பரீட்சை நிலையங்களும் , 542 ஒருங்கிணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.