எரிபொருள் விநியோகத்தில் அதிரடி மாற்றம்!

201 0

அனர்த்தம் மற்றும் அவசர சேவைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு மற்றும் அத்தியாவசிய சேவை வழங்குனர்களின் வாகனங்கள் மற்றும் ஜெனரேட்டர்களுக்கு தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளை வழங்குமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பான அறிவித்தல் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சட்டத்தை உருவாக்குவோர், அரச பகுப்பாய்வாளர்கள், சிறைச்சாலை அத்தியாவசிய சேவைகள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் உள்நாட்டு இறைவரி கடமைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு உரிய எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், நெல், அரிசி, சீனி, பருப்பு, பால் மா, காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொண்டு செல்லும் லொறிகளுக்கும், உரம் விநியோகம் செய்யும் லொறிகளுக்கும் சம்பந்தப்பட்ட நிரப்பு நிலையங்களில் எரிபொருள் நிரப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்சாரம், நீர் விநியோகம், கல்லி பவுசர்கள், கால்நடை பொருட்கள் மற்றும் மீன் உற்பத்தி உள்ளிட்ட கழிவுகளை அகற்றுவதில் நேரடியாக ஈடுபடும்

தேயிலை, இறப்பர், தேங்காய் மற்றும் ஏற்றுமதி விவசாய பயிர் தொழிற்சாலைகள், மின்சாரம், நீர் வழங்கல், கல்லி பவுசர் உள்ளிட்ட பிற கழிவுகளை அகற்றும், கால்நடை உற்பத்தி மற்றும் மீன் உற்பத்தியில் நேரடியாக ஈடுபடும் லொறிகளுக்கும் மற்றும் தொழிற்சாலைகளையும் அத்தியாவசிய சேவைகளாக கருதி எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.