எரிசக்தி அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை!

163 0

எரிபொருள் விநியோகிக்கும் பவுஸர்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களினால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தகவல் வௌியாகியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரித்துள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த குழுவினர் வீதிகளில் செல்லும் எரிபொருள் பவுஸர்களை வழிமறித்து தமது பிரதேசத்தில் எரிபொருளை இறக்காவிட்டால் தீ வைப்பதாக கூறி அச்சுறுத்துவதாக தகவல் வௌியாகியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்ந்தால், எரிபொருள் பவுஸர் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி விநியோகத்தை நிறுத்த வேண்டியிருக்கும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.