பேருந்து ஜன்னலில் தலையை நீட்டிய குழந்தை பலியான சோகம்!

174 0

மாவனல்லை ரம்புக்கனை வீதியில் மஹவத்தை கிரிகல சந்தியில் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் மீது மாவனெல்லை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து மோதியதில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

விபத்தின் போது பேருந்தில் பயணித்த குழந்தை ஜன்னலின் வௌியே தலையை நீட்டியுள்ள நிலையில் குழந்தையின் தலை லொறியில் பட்டு குழந்தை படுகாயமடைந்துள்ளது.

மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த குழந்தை தம்விட உஸ்ஸாபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் மூன்றரை வயது குழந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

லொறி சாரதி தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மாவனெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.