ஹரின் மற்றும் மனுஷவின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

208 0

பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

ஒன்பது புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அதில் ஹரின் பெர்னாண்டோ சுற்றுலா மற்றும் காணி அமைச்சராகவும் மனுஷ நாணயக்கார தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.