கடந்த 9 ஆம் திகதியன்று இடம்பெற்ற வன்முறையில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்படவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், இந்த கோரிக்கையை விடுத்தார்.
இதன்போது, ஆட்சேபனையை வெளியிட்ட, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர், நாமல் ராஜபக்ச கூறுவதில் நியாயம் இருப்பதாக குறிப்பிட்டார்.
இதன்படி, 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைக்கு காரணமான நாமல் ராஜபக்ச, பொலிஸில் சரணடையவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
எனினும் இதனை மறுத்த நாமல் ராஜபக்ச, குறித்த சம்பவத்துக்கு பொறுப்பானர்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளா்கள்.
அத்துடன், வாக்குமூலங்களை வழங்கியுள்ளார்கள் என்று குறிப்பிட்டார்.