அண்ணாவின் 48-வது நினைவுதினத்தையொட்டி மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.கவினர் அமைதிப்பேரணியாக சென்று அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.
காலை 8.10 மணியளவில் சேப்பாக்கத்தில் இருந்து தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி தொடங்கியது. பிரமாண்டமான மலர் வளையத்தை சுமந்தபடி தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் பேரணியாக சென்றனர்.
முன்னாள் மத்திய மந்திரிகள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், முதன்மை செயலாளர் துரைமுருகன், எம்.எல்.ஏக்கள் பி.கே. சேகர்பாபு, ஜெ. அன்பழகன், கு.க.செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
8.40 மணிக்கு பேரணி அண்ணா நினைவிடத்தை வந்தடைந்தது. அங்கு தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.மகளிர் அணியினர், தொண்டர் அணியினர், தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.