அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்புப் பேரணியானது கொழும்பு தாமரைத் தடாகத்திற்கு அருகில் இன்று (19) ஆரம்பமாகி ஜனாதிபதி மாளிகையை நோக்கிச் சென்று கொண்டிருந்த நிலையில் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்படுகின்றது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பேரணி உலக வர்த்தக மைய வளாகப்பகுதியை நெருக்கிய நிலையில், குறித்த பகுதியில் பொலிஸார் பேரணி நகராத வகையில் தடையை ஏற்படுத்தியிருந்தனர்.
குறித்த பதியில் வைத்து ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸாரினால் நீர்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
>இந்நிலையில் பொலிஸாரின் தடையை உடைத்துக்கொண்டு பல்கலைக்கழக மாணவர்கள் முன்நோக்கிச் செல்ல முயற்சிப்பதால் குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது