நீதிமன்றத்தை அவமதிக்கும் செயற்பாடுகளிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு பல்கலைக்கழக மாணவர்களுக்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிவுரை கூறியுள்ளார்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் ராஜித சேனாரத்ன, நீதிமன்றத்தின் தீர்ப்பொன்றை எதிர்த்து மறுபரிசீலனை மனு தாக்கல் செய்ய முடியுமே தவிர, எதிர்ப்பு நடவடிக்கைள் மற்றும் அதனை விமர்சிக்கும் கருத்துக்களை வெளியிட முடியாது.
அவ்வாறு விமர்சனக் கருத்துக்களை வெளியிடப் போய் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க இரண்டு வருடங்கள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேர்ந்தது. இதனை மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
தனியார் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது இலவசக் கல்வியை பாதுகாக்கும் செயற்பாடாக அமையப்போவதில்லை.
இலங்கையில் வாழும் எந்தவொரு நபரும் அரசாங்க அல்லது தனியார் பல்கலைக்கழகங்களில் தங்கள் பட்டப்படிப்பை தொடரும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதே கல்வித்துறையை முன்னேற்றுவதற்கான சிறந்த நடவடிக்கையாக அமையும் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.