சிறிலங்கா அரசின் கோர முகத்தை இனம் காட்டும் வகையில் பேர்லினில் நடைபெற்ற துண்டுப்பிரசுர போராட்டம்

413 0

எமது வரலாற்றுத் தாயகத்தில் ஒரு தேசிய மக்கள் இனமாக நிம்மதியோடும், கௌரவத்தோடும் நம்மை நாமே ஆண்டு வாழ விரும்பும் எம்மை நிம்மதியாக வாழ விடுங்கள் என்ற மிக எளிமையான அரசியல் அபிலாசைகளை முன்வைக்கும் தமிழினத்திற்கும் தமிழர்களை அழித்தொழித்து தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து தமது சிங்கள பௌத்த பேரினவாத மேலாதிக்கத்தினை இலங்கைத் தீவு முழுவதும் நிலைநிறுத்த முனையும் சிங்கள இனத்திற்குமான வேறுபாட்டின் ஆழத்தினை வெளிப்படுத்தும் ஒற்றைப் புள்ளியாகவே சிறிலங்காவின் சுதந்திர தினம் அமைந்துள்ளது.

“நல்லாட்சியின்” பெயரால் எமது தேசிய அபிலாசைகள் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு கொண்டிருப்பதானது, எப்பாடுபட்டேனும் தமிழர்களை அழித்து தமிழர் தாயகத்தை கபளீகரம் செய்துவிடத் துடிக்கும் சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் முகத்திரையை கிழித்து நாம் வாழும் நாடுகளில் உள்ள வேற்றின மக்களுக்கு வெளிப்படுத்தும் வகையில் இன்றைய தினம் யேர்மனியில் பேர்லினில் அமைந்துள்ள சிறிலங்கா தூதரகத்தின் சுற்றுவட்டாரத்துக்கு வேற்றின மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக “கவனம் , உங்கள் அக்கத்தில் இனப்படுகொலையாளி ” எனும் கருத்துக்கு அமைய பல நூற்றுக்கணக்கான துண்டுப்பிரசுரங்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாது தமிழின உணர்வாளர்களால் இன்று விநியோகிக்கப்பட்டது.