வன்முறையை தடுக்க வேண்டாமென பொலிஸ்மா அதிபரும், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் கட்டளை பிறப்பித்தது உண்மையே – ரமேஷ் பதிரண

248 0

காலி முகத்திடல் போராட்டகாரர்கள் மீது தாக்குதலை மேற்கொள்ள சென்ற குண்டர்களை தடுக்க வேண்டாம் என பொலிஸ்மா அதிபரும், பொது மக்கள்  பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் கட்டளை பிறப்பித்ததாக குறிப்பிடப்படுவது  முற்றிலும் உண்மை என முன்னாள் அமைச்சர் ரமேஷ் பதிரண சபையில் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதம் தொடர்பில் பாராளுமன்றில் நேற்று இடம்பெற்ற ஒத்திவைப்பு விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

காலி முகத்திடல் போராட்டகாரர்கள் மீது கடந்த 09ஆம் திகதி திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட மிலேட்சத்தனமான தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவதை அறிவிப்பதாக குறிப்பிட்டதை தொடர்ந்து அவரை வழியனுப்பி வைப்பதற்காகவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆதரவாளர்கள் அலரி மாளிகைக்கு அழைத்து வரப்பட்டனர்.

கூட்டம் நிறைவடைந்த போது ஒரு சில கீழ்த்தரமான அரசியல்வாதிகள் கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்களிடம் காலி முகத்திடல் போராட்டகாரர்கள் மீது தாக்குதலை மேற்கொள்ளுமாறு அழுத்தம் பிரயோகித்ததை கவலையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவர்களின் அழுத்தம் மற்றும் தூண்டுதலை தொடர்ந்தே ஒரு சிலர் தாக்குதலை நடத்த காலி முகத்திடல் நோக்கி சென்றார்கள்.

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சுமார் ஒருமாதகாலமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை இல்லாதொழிக்கவும்இபோராட்டகாரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளவும்  ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் எவ்வித தேவையும் ஏற்படவில்லை. போராட்டகாரர்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டது.

அலரிமாளிகைக்கு வந்த ஆளும் தரப்பு ஆதரவாளர்கள் தாக்குதலை நடத்த காலி முகத்திடல் நோக்கி செல்லும் போது நான் அலரிமாளிகையில் இருந்தேன். அவ்வேளை பிரதி பொலிஸ்மா அதிபருக்கு தொலைபேசி ஊடாக அழைப்பினை ஏற்படுத்தி காலி முகத்திடல் போராட்டகாரர்கள் மீது தாக்குதலை மேற்கொள்ள ஒரு தரப்பினர் விரைந்து வருகிறார்கள், அவர்களை தடுக்குமாறு அறிவுறுத்தினேன்.

எவ்வித பிரச்சினையும் இல்லை, வீதிதடைகள் போடப்பட்டுள்ளதாக அவர் என்னிடம் தெரிவித்தார். பாரிய விளைவு ஏற்பட போகிறது உடனே அதனை தடுத்து நிறுத்துங்கள் என பல்வேறு தரப்பினர் என்னிடம் வலியுறுத்தியதை தொடர்ந்து நான் ஜனாதிபதியிடம் இவ்விடயம் தொடர்பில் நேரடியாகவே உரையாடினேன்.

ஜனாதிபதி எம்முன்னிலையில் பிரதிபொலிஸ்மா அதிபருக்கு தொலைப்பேசி அழைப்பை ஏற்படுத்தி’நான் காலையிலேயே குறிப்பிட்டேன் இதனை தடுங்கள் என்று என்ன நடக்கிறது என அவரிடம் வினவினார்.

இதற்கு பிரதி பொலிஸ்மா அதிபர் ‘சேர்  இப்போராட்டத்திற்கு கண்ணீர் புகைவீச்சி பிரயோகிக்க வேண்டாம், என 12.40 இற்கு பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டதாக ; ஜனாதிபதியிடம் குறிப்பிட்டார்.

இதன் போது ஜனாதிபதி பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்துவிடம் ஜனததிபதி ‘ உனக்கு நான் சொன்னது நாட்டின் ஜனாதிபதியாக உடனே நிறுத்து என குறிப்பிட்டதை தொடர்ந்தே காலி முகத்திடல் போராட்டக்களத்தின் மீது கண்ணீர் புகை பிரயோகிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்தே நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது.காலி முகத்திடல் போராட்டகாரர்கள் மீது தாக்குதல் மேற்nகொள்ள சென்ற குண்டர்களை தடுக்க வேண்டாம் என பொலிஸ் மா அதிபர் மற்றும்  பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் குறிப்பிட்டுள்ளது முற்றிலும் உண்மை என்றார்.