மே-18-தமிழினப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று யேர்மனி சுவேலம் (Schwelm) நகரில்

1021 0

மே-18. கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது ஒரு குறுகிய நிலப்பரப்பில் பல்லாயிரக்கணக்கான தமிழின மக்களை சிங்கள இனவெறி அரசு கொன்றழித்த உச்சநாள் இன்று.

தமிழினப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று யேர்மனி சுவேலம் (Schwelm) நகரில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
பெருந்திரளான மக்கள் முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்தபடி பேரினவாத அரசால் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களிற்கும், தமிழீழ விடுதலைப் போரிலே தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களிற்கும் சுடர்வணக்கம், மலர்வணக்கம் செலுத்தி அஞ்சலி செய்தனர்.

நிகழ்வில் பொதுச்சுடரினை இடதுசாரிக் கட்சியின் பேச்சாளர் Herr Henning அவர்கள் ஏற்றி வைத்தார். தமிழீழத் தேசியக்கொடியை தாயகநலன் பொறுப்பாளர் திரு இராயன் அவர்கள் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து மாவீரர்களுக்கான ஈகைச்சுடரினை 2ம் லெப்டினன் ஆற்றலோன் அவர்களின் சகோதரி உதயகலா யோகராயா ஏற்றி வைத்தார்.

மேலும் கவி வணக்கம், இசை வணக்கம், பாடல், நடனம், ஆகிய நிகழ்வுகளுடன் சிறப்புரைகளும் இடம்பெற்றன. இளையோர் அமைப்பின் நிகழ்ச்சியும், யேர்மன் மொழியிலான உரையும் அனைவரையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.