இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்கள், சுழற்பந்து வீச்சுகளை எதிர்கொள்ள பழக வேண்டும் என்று அந்த அணியின் பயிற்றுவிப்பாளர் ட்ரெவர் பாய்லிஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கெதிரான 20க்கு20 கிரிக்கட் தொடரை இங்கிலாந்து அணி இரண்டுக்கு பூச்சியம் என்ற கணக்கில் இழந்துள்ளது.
நேற்று இடம்பெற்ற தொடரின் இறுதி போட்டியில் இங்கிலாந்து 19 பந்துகளில் 8 ஓட்டங்களுக்கு 8 விக்கட்டுகளை இழந்தது.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வெந்த்ரா சஹால் 6 விக்கடுகளை வீழ்த்தினார்.
அத்துடன் இந்தியாவுடனான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களையும் இங்கிலாந்து ஏற்கனவே இழந்திருந்தது.
இதற்கு சுழற்பந்து வீச்சாளர்களை சமாளிக்க இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்கள் பயிற்சி இன்றி இருக்கின்றமையே காரணம் என்று அவர் கூறியுள்ளார்.
இதனை முன்னேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.