யேமனில் அமெரிக்க படையினர் நடத்திய தாக்குதலில் அதிகப்படியான பொதுமக்கள் உயிரிழந்ததாக கூறப்படுவது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அமெரிக்காவின் இராணுவம் அறிவித்துள்ளது.
கடந்த வார இறுதியில் யேமனின் பய்டா மாகாணத்தில் அமெரிக்க படையினர் அல் கைடா இயக்க உறுப்பினர்களை இலக்கு வைத்து தாக்கதல் நடத்தி இருந்தனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் அங்கீகரிக்கப்பட்ட முதலாவது தாக்குதல் திட்டம் இதுவாகும்.
இதில் 14 தீவிரவாதிகளுடன் அமெரிக்க பiடைத்தரப்பில் ஒருவரும் பலியாகினர்.
எவ்வாறாயினும் 30க்கும் அதிகமான பொதுமக்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்ததாக மருத்துவத் தரப்பினரால் கூறப்படுகிறது.
இது தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.