மட்டக்களப்பில் இடம்பெற்ற மே 18 தமிழினப் படுகொடுகொலையின் 13 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.
மே 18 தமிழினப் படுகொடுகொலையின் 13 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு (புதன்கிழமை) வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுசரணையுடன் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் மே 18 இல் முள்ளிவாய்க்காலில் படுகொடுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூறும் முகமாக பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் சமய தலைவர்கள், கிழக்கைச் சேர்ந்த போரினால் பாதிக்கப்பட்ட கிராமிய மட்ட மக்கள், கிராம மட்ட சிவில் அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள், மீனவ மற்றும் விவசாய சங்கங்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் என பெருந்திரலானோர் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.