நாளை மறுதினம் இடம்பெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வுகளை புறக்கணிக்குமாறு தமது கட்சி பொதுமக்களை கோருவதாக லங்கா சமசமாஜ கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் பிரதான செயலாளர் திஸ்ச வித்தாரன இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனை குறிப்பிட்டார்.
இந்த அரசாங்கம் கடந்த இரண்டு வருடங்களால் பொருப்பற்ற விதத்தில் செயற்பட்டு வருகின்றது.
தொடர்ந்தும் அவ்வாரே செயற்படும்.
ஆகவே இந்த முறை அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய சுதந்திர தினத்தை புறக்கணிக்குமாறு பொதுமக்களை கோருவதாகவும் திஸ்ச வித்தார கோரியுள்ளார்.