சாணக்கியன் ராசமாணிக்கம் எம்.பியை தலைமை ஆசனத்திற்கு வருவதை வேண்டுமென்றே தடுத்ததாக இன்று செவ்வாய்க்கிழமை சபையில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த குற்றச்சாட்டு காரணமாக ஆளும் தரப்பு எம்.பிகளுக்கும் சாணக்கியன் எம்.பிக்கும் இடையில் கடும் தர்க்கம் ஏற்பட்டது. சாணக்கியன் எம்.பிக்கு ஆதரவாக எம்.ஏ.சுமந்திரன் எம்.பி கருத்து வெளியிட்டார்.
சாணக்கியன் ராசமாணிக்கம் எம்.பி குறிப்பிடுகையில்,
சிறப்புரிமை தொடர்பான பிரச்சினை. சபாநாயகர் செல்ல வேண்டியுள்ளதால் தலைமை பீடத்துக்கு வருமாறு படைக்கள சேவிதர் ஒருவர் எனக்கு அறிவித்தார்.
அதனால் நான் அதற்கு தயாராக இருந்தேன். அதற்கிடையில் செயலாளர் நாயகத்திற்கு சபை முதல்வர் தகவல் அனுப்பி எனக்குப் பதிலாக உங்களை (சாந்த பண்டார எம்.பி) தலைமை ஆசனத்திற்கு கொண்டுவருமாறு அறிவிப்பதை கண்டேன்
இது தொடர்பில் செயலாளர் நாயகத்திடம் வினவிய போது அது பற்றி தன்னிடம் கேட்க வேண்டாம் என்றார்.
அக்கிராசன எம்.பி குழுவில் நானும் இருக்கிறேன். பாராளுமன்றம் ஜனநாயகமான இடம்.இது பொதுஜன பெரமுன பாரளுமன்றமல்ல.
சகல எம்.பிகளுக்கும் சம உரிமை உள்ளது. தலைமை ஆசனத்தில் அமர்வது எனக்கு பெரிய விடயமல்ல. அரசுக்கு எதிராகவும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராகவும் நான் பேசுவதால் இவ்வாறு தடுத்துள்ளனர்.</p>
<p>இதற்கு சபை முதல்வர் தினேஷ் குணவர்த்தன பதில் வழங்குகையில் சபாநாயகருக்குத் தான் பதில் வழங்கும் உரிமை என்றார்.
இதற்குப் பதில் அளிக்க சாணக்கியன் எம்.பி முயன்றாலும் அதற்கு வாய்ப்பு அளிக்கப்படாததால் சபையில் கடும் சர்ச்சை ஏற்பட்டது.
இதன்போது சுமந்திரன் எம்.பி ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை முன்வைத்து ராசமாணிக்கம் தனது சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்தார். அதற்கு இடமளிக்க வேண்டும் என்றார்.
இதன் போது சபைக்கு தலைமை தாங்கிய சாந்த பண்டார எம்.பி பதில் அளிக்கையில், ராசமாணிக்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதே எனக்கும் அழைப்பு வந்தது
நான் அந்த சமயம் சபையில்தான் இருந்தேன்.நானும் அக்கிராசன் எம்.பி பட்டியிலில் சிரேஷ்ட உறுப்பினராக முன்னிலையில் இருக்கிறேன் என்றார்.
ஆனால் தொடர்ந்தும் சபையில் சர்ச்சை நீடித்ததோடு சாணக்கியன் எம்.பியும் ஆளும் தரப்பு எம்.பிகளும் கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.