அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் சென்றாண்டுக்கான மீளாய்வும் தொடரும் ஆண்டுகளுக்கான புதிய திட்டமிடலும் 13.05.2022ஆம் நாள் முதல் 15.05.2022ஆம் நாள் வரை நெதர்லாந்து நாட்டில் நடைபெற்றது.
இத்திட்டமிடலில் வடஅமெரிக்கா, கனடா, நெதர்லாந்து, நோர்வே, பெல்சியம், யேர்மனி, சுவிற்சர்லாந்து, சுவீடன், பின்லாந்து, இத்தாலி, டென்மார்க், பிரித்தானியா ஆகிய 12நாடுகளின் கல்விப்பணி நிருவாகிகளும் அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் நிருவாகிகளும், கலந்து கொண்டனர்.
இதில், கடந்த ஆண்டுக்கான செயல்பாடுகள்பற்றியும் இனிவரும் காலங்களில் புதிதாகச் செயல்படுத்தவுள்ள திட்டங்கள்பற்றியும் கலந்துரையாடப்பட்டன. இக்கலந்துரையாடலில் முதன்மை விடயங்களாகப் பாடநூல்கள், கற்பித்தல் செயல்பாடுகள், தேர்வுகள் போன்றன எடுத்துக்கொள்ளப்பட்டன. இவைமட்டுமன்றி, அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் வருடாந்தக் கணக்கறிக்கையும் காட்டப்பட்டது. இத்திட்டமிடலில், அனைத்து நாட்டுக்கல்வி நிருவாகிகளின் ஒருமித்த முடிவுகள் எடுக்கப்பட்டு, அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் இக்கூட்டம் நிறைவுக்கு வந்தது.