முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவு சுமந்து பெர்லின் நகரில் வளர்ந்து நிற்கும் அப்பில் மரம்.

658 0

முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவுசுமந்து 2012 ஆண்டு  யேர்மனி பெர்லின் நகரில் மிகப் பிரசித்திபெற்ற    பூங்காவனத்தில் ( Britzer Garten) பாதுகாப்பான பகுதியில் அவர்களின் அனுமதியுடன் அப்பில் மரம்  நாட்டப்பட்டது.  ஒவ்வொரு வருடமும் வலிகள்  சுமந்த நாட்களில் பேர்லின் வாழ்  உறவுகள்  இம் மரத்தை பார்வையிட்டு வணக்கம் செலுத்துவது வழமை. அந்தவகையில் இம் முறையும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 17:30 மணிக்கு ஈழத்தமிழர்களின் இனவழிப்பை எடுத்துரைக்கும் அப்பில் மரத்தை பார்வையிட்டு சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கத்தையும் செலுத்தினர்.