தென் சீனக்கடல் பகுதியில் விமானப்படை தளம் அமைக்க எங்களுக்கு உரிமை உண்டு-சீனா

443 0

201607131036507311_China-claims-rights-to-build-airbase-in-south-china-sea_SECVPFதென் சீனக்கடல் பகுதியில் உரிமை கொண்டாடுவதற்கு சீனாவிடம் வரலாற்றுபூர்வ ஆதாரம் ஏதுமில்லை என நெதர்லாந்து நாட்டில் உள்ள சர்வதேச நடுவர் தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா தென்சீனக்கடல் பகுதியில் விமானப்படை தளம் அமைக்க எங்களுக்கு உரிமை உண்டு என தெரிவித்துள்ளது.

தென் சீனக்கடல் பகுதியில் உரிமை கொண்டாடுவதற்கு சீனாவிடம் வரலாற்றுபூர்வ ஆதாரம் ஏதுமில்லை என நெதர்லாந்து நாட்டில் உள்ள சர்வதேச நடுவர் தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா தென்சீனக்கடல் பகுதியில் விமானப்படை தளம் அமைக்க எங்களுக்கு உரிமை உண்டு என தெரிவித்துள்ளது.

சீனாவின் தென்பகுதியில், பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாக அமைந்துள்ள தென் சீனக்கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகின் மூன்றில் ஒரு பகுதி கப்பல் போக்குவரத்து, இந்தப் பகுதி வழியே நடைபெறுவதாலும், இந்த கடலில் அடிப்பகுதியில் எண்ணெய், இயற்கை எரிவாயு வளம் இருப்பதாக சொல்லப்படுவதாலும் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஆனால், ‘‘தென் சீனக்கடலில் எங்களுக்கும் பங்கு இருக்கிறது’’ என்று பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனை, தைவான் போன்ற நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன.

இந்த நிலையில், சீனாவுக்கு எதிராக திஹேக் நகரில் ஐ.நா. சட்டதிட்டங்களின்படி அமைக்கப்பட்டுள்ள சர்வதேச அளவிலான மத்தியஸ்தம் செய்வதற்கான நிரந்தர தீர்ப்பாயத்தில் பிலிப்பைன்ஸ், 2013–ம் ஆண்டு வழக்கு தொடுத்தது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வழக்கின் தீர்ப்பை அந்த தீர்ப்பாயம் நேற்று வழங்கியது.

தென் சீனக்கடலில் சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா வரலாற்று உரிமைகள் கோருவதற்கு சட்டரீதியில் எந்த முகாந்திரமும் இல்லை என கூறி உள்ளது. இந்த தீர்ப்பை பிலிப்பைன்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் வரவேற்றுள்ளன.

ஆனால், இந்த தீர்ப்பை ஏற்க முடியாது என சீனா திட்டவட்டமாக கூறிவிட்டது. தென் சீனக்கடல் பகுதியில் விமானப்படை தளம் அமைக்க எங்களுக்கு முழு உரிமை உள்ளது; இது சீனா எதிர்க்கொள்ளும் அச்சுறுத்தலின் நிலையை பொறுத்தது என்று சீனா வெளியுறவுத்துறை துணை மந்திரி லியு ஜின்மின் கூறியுள்ளார்.

இதுபற்றி சீன வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், ‘தென் சீனக்கடல் தீவுகளில் பிரத்யேக பொருளாதார மண்டலங்களை கொண்டுள்ளோம். இதில் 2 ஆயிரம் ஆண்டுக்கு மேலாக வரலாற்று ரீதியிலான செயல்பாடுகளை சீன மக்கள் கொண்டுள்ளனர். சீனாவின் நிலைப்பாடு, சர்வதேச சட்டம் மற்றும் நடைமுறைகளின் அடிப்படையிலானதுதான்’ என கூறப்பட்டுள்ளது.