க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகள் நடத்துவது (17) செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எந்த ஒரு நபரோ அல்லது நிறுவனமோ இந்த உத்தரவை மீறினால் அவர்கள் பரீட்சைகள் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக கருதப்பட்டு அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.