ரணிலின் மற்றும் ஒரு திட்டம்! கட்சி தலைவர்களை இணைத்து புதிய சபை

203 0

அரசாங்கத்தில் அமைச்சுக்களை பொறுப்பேற்காத கட்சி தலைவர்களை இணைத்து தேசிய சபை ஒன்றை நிறுவவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில வெளியிட்டுள்ளார்.

கோட்டாபயவின் அரசாங்கத்தில் இருந்து விலகி, சுயாதீனமாக செயற்பட்ட 10 கட்சிகளுடன் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்திப்பு ஒன்றை நடத்துகிறார்.

இந்த சந்திப்பில் கலந்துகொள்ளும் முன்னதாகவே கம்மன்பில இந்த தகவலை வெளியிட்டார். பிரதமரின் தகவல்படி 10 துறைசார் மேற்பார்வை குழுக்கள் நிறுவப்படும். அத்துடன் 5 பிரதான குழுக்கள் நிறுவப்படும் என்றும் கம்மன்பில தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் டிசம்பர் மாதம் வரைக்குமான வரவுசெலவுத்திட்டம் ஒன்றும் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 21ஆம் அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பான முன்னெடுப்புக்களும் மேற்கொள்ளப்படவுள்ளன.