எரிபொருள் வரிசையில் நின்ற இளைஞனின் நேர்மை – குவியும் பாராட்டுக்கள்

242 0

அரலங்கல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் வரிசையில் நின்ற நபரின் நேர்மை தொடர்பில் பலரும் பாராட்டினை தெரிவித்துள்ளனர்.

அரலங்கல எரிபொருள் நிரப்பு நிலைய வரிசையில் கிடந்த பையை எடுத்த இளைஞருக்கு அதில் 35 ஆயிரம் ரூபாய் பணம் கிடைத்துள்ளது.

அந்த பணத்தின் உரிமையாளரை ஒரு மணித்தியாலத்திற்கு மேல் குறித்த இளைஞர் தேடியுள்ளார். எனினும் அவரை கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது.

எனினும் பணத்தின் உரிமையாளர் அதனை தேடி வருவார் என நினைத்த இளைஞர் அதே இடத்தில் நின்றுள்ளார். அதற்கமைய, உரிமையாளர் அதனை தேடி வந்துள்ளார். அதனை ஒப்படைத்து விட்டு அவர் அங்கிருந்து சென்றுள்ளார்.

அடுத்த நாள் இளைஞன் பணியாற்றும் அலுவலகத்தை தேடி குறித்த பண பையின் உரிமையாளர் சென்றுள்ளார். பிஸ்கட் மற்றும் குடிபானத்துடத்துடன் சென்றவர் குறித்த இளைஞருக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

அலுவலகத்தில் கட்டணம் செலுத்த வழங்கப்பட்ட பணத்தையே தான் தொலைத்து விட்டதாகவும் அதனை தேடி கொடுத்து உதவியமைக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை குறித்த இளைஞன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் 35 ஆயிரம் என்பது பெரிய தொகையாகும்.

எனினும் அவரின் நேர்மையான குணத்தின் காரணமாக அதனை உரியவரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளார் என சமூக வலைத்தளத்தில் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.