வருமானத்தின் ஒரு பகுதியல்லாதது என சந்தேகிக்க முடியுமான, ; ஒரு தொகை டொலரை உண்டியல் முறையினூடாக பரிமாற்றம் செய்வதற்கு முற்பட்டதாக கூறி கறுப்புப் பண சுத்திகரிப்பு குற்றச்சாட்டின் கீழ் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரின் நடவடிக்கைப் பிரிவுக்கு கிடைத்த விஷேட தகவல் ஒன்றுக்கு அமைய பொரலஸ்கமுவ பொலிஸ் பிரிவில் சிறப்பு சுற்றி வளைப்பினை முன்னெடுத்து குறித்த இரு சத்தேக நபர்களையும் கைது செய்ததாக அதிரடிப் படையினர் கூறினர்.
பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 40, 51 வயதுகளை உடைய இருவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிமும் 47,000 அமெரிக்க டொலர் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றின் இலங்கை ரூபா பெறுமதி ஒரு கோடியே 71 இலட்சத்து 55 ஆயிரம் ; ரூபாவாகும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.
இந் நிலையில் கைது செய்யப்பட்ட இருவரும், கிருலப்பனையில் அமைந்துள்ள சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.