சென்னை கொருக்குப்பேட்டையில், திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் சேகர் பாபு, இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்றார். திமுக அரசு பதவியேற்ற ஓராண்டில் 360 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும், தமிழகம் முதன்மை மாநிலமாக மாற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
“சட்டமன்றத்தில் நிறைவேற்றும் தீர்மானத்தை கவர்னர் ஏற்காமல் திருப்பி அனுப்புகிறார் என்றால், அந்த கவர்னரை நாங்கள் ஏன் ஏற்றுக்கொள்ளவேண்டும்? ஆட்டுக்கு எப்படி தாடி தேவையில்லையோ, அதுபோலத்தான் இந்த தமிழ்நாட்டுக்கு கவர்னர் தேவையில்லை என்பதுதான் தி.மு.கவின் கொள்கை” என்றும் சேகர் பாபு குறிப்பிட்டார்.