இன்று எரிபொருள் விநியோகம் இடம்பெறாது

190 0

மக்கள் எரிபொருள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (15) அரச பொது விடுமுறை தினமாக இருப்பதால் எரிபொருள் விநியோகம் இடம்பெறாதது இதற்குக் காரணம் என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தீர்ந்தமையினால் இன்று எரிபொருளைப் பெற வந்த நுகர்வோர் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதேவேளை, 40,000 மெற்றிக் தொன் டீசல் ஏற்றிய கப்பல் இன்று காலை நாட்டை வந்தடைந்ததாகவும், மாதிரிகளை பரிசோதித்ததன் பின்னர் இன்று தரையிறங்கும் பணி ஆரம்பிக்கப்படும் எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

40,000 மெட்ரிக் தொன்களை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் எதிர்வரும் வியாழன் நாட்டை வந்தடைய உள்ளது.

92 மற்றும் 95 ரக 37,000 மெட்ரிக் தொன் பெற்றோலை ஏற்றிச் செல்லும் கப்பல் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ள போதிலும், டொலர்கள் இல்லாததால் தரையிறங்க முடியவில்லை.

கப்பலில் சுமார் 10 நாட்களுக்கு போதுமான எரிபொருள் உள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, சந்தையில் உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு இன்னும் தீர்க்கப்படவில்லை.

எவ்வாறாயினும், அத்தியாவசிய சேவைகள் மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக கெரவலப்பிட்டிய லிட்ரோ எரிவாயு முனையத்தில் 37.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர்கள் இன்றும் விநியோகிக்கப்பட்டன.

3,500 மெட்ரிக் தொன் எரிவாயுக் கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் ஆனால் அதனை வெளியிடுவதற்கு டொலர்கள் இல்லை எனவும் லிட்ரோ நிறுவன தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.