சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் இரண்டு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள 21 பிரதேச செயலாளர் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதில் 2,352 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 7 குடும்பங்கள் 3 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக 82 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இதேவேளை, சீரற்ற காலநிலையினால் எதிர்காலத்தில் வெள்ள நிலைமை ஏற்படுமாயின் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 10 நிவாரணக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் தென் மாகாணங்களில் சம்பந்தப்பட்ட குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதுடன், இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் ஏற்கனவே கடற்படைக் குழுக்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.