சபை முதல்வரக அமைச்சர் தினேஷ் குணவர்தனவும், ஆளுந்தரப்பின் பிரதம கொறடாவாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டதன் பின்னரான முதலாவது பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.
இதன்போது ரஞ்சித் சியம்பலாபிட்டிய பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து விலகியுள்ள நிலையில் ஏற்பட்டுள்ள பிரதி சபாநாயகர் பதவிக்கான வெற்றிடத்திற்கான நியமனம் அன்றைய தினம் இடம்பெறவுள்ளது
இதற்கமைய ஐக்கிய மக்கள் சக்தி குறித்த பதவிக்காக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவின் பெயரை முன்மொழிந்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பிரதி சபாநாயகர் பதவிக்காக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷவின் பெயரை முன்மொழியவுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.