கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்’ ; என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் அவல நிலை குறித்து அதனை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றும் இரண்டாவது நாளாக (13) ; கிழக்கு பல்கலைக் கழகத்திற்கு முன்பாகவும் அதனைத் தொடர்ந்து செங்கலடி சந்தைப் பகுதியிலும் முன்னெடுக்கப்பட்டது.
இந் நிகழ்வினை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் ஏற்பாடு செய்திருந்தனர். ‘முள்ளிவாய்க்கால் கஞ்சியினை’ பெரும் ஆவலுடன் மக்கள் உணர்வு பூர்மாக பரிகினார்கள். 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த காலப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் நினைவாக முள்ளி வாய்க்கால் கஞ்சிவாரம் அனுஸ்டிக்கப்படுகிறது.
செங்கலடி வந்தாறுமூலை கிழக்கு பல்கலைகழகத்திற்கு முன் பகுதியில் ஒன்று கூடியவர்கள் கஞ்சியினை அவ்விடத்தில் காச்சியதுடன் அதனை சிரட்டையில் கொண்டு வீதியினால் சென்றோர்கள், பொதுமக்கள் என பலருக்கம் பரிமாறினார்கள்.
அத்துடன் முள்ளி வாய்க்கால் கஞ்சி என்ற துண்டுப் பிரசுரங்களும் வழங்கி வைக்கப்பட்டது.இதே நிகழ்வு செங்கலடி சந்தைப் பகுதியிலும் முன்னெடுக்கப்பட்டது.
நீரினுள் அரிசியை இட்டு கிடைத்தற்கரிய உப்பையும் இட்டு காய்ச்சி உருவாக்கப்பட்டதே இவ் உணவாகும்.
இந் நிகழ்வில் மதகுருமார்கள், சிவில் அமைப்பு பிரதி நிதிகள் மற்றும் வடக்கு கிழக்கு முன்னேற்ற கழகத் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வானது மே 12 தொடக்கம் மே 18 வரை ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ வாரத்தினை நினைவு கூறும் வாரமாக ; மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நினவு கூறப்பட்டு வருகிறது.