பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு 6 பேர் கொண்ட சிறப்பு குழு

191 0

பாராளுமன்ற உறுப்பினர்களின்  (எம்.பி.) பாதுகாப்புக்காக  ஆறு பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் (நடவடிக்கை பிரிவு) இதற்கான ஆலோசனைகளை, அந்த பிரிவின் அனைத்து பொறுப்பதிகாரிகளுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

அத்துடன், பிரதேச பொலிஸ் நிலையங்கள் ஊடாக , குறித்த எம்.பி.யின் பாதுகாப்புக்கு உத்தியோகத்தர்களைப் பெற்றுக்கொள்ளுமாறும், அது தொடர்பில்  குறித்த எம்.பி.யுடன் கலந்துரையாடி  பட்டியல் ஒன்றினை பெற்றுக்கொள்ளுமாறும்  அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் கீழ் இந்த ஆறு பேர் கொண்ட குழு அமைய வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ள நிலையில், ; எவரேனும் குறித்த பாதுகாப்பு தொடர்பில் விருப்பம் தெரிவிக்காவிட்டில் அது தொடர்பில் எழுத்து மூலம் ; அதனைப் பெற்றுக்கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது