மஹிந்த உள்ளிட்ட 7 பேரை கைது செய்ய சி.ஐ.டி.க்கு உத்தரவிடுமாறு கோரி நீதிமன்றில் மனுத் தாக்கல்

216 0

கோட்டா கோ கம, மைனா கோ கம அமைதி போராட்டத்தில் ; அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட 7 பேரைக் உடனடியாக கைது செய்ய சி.ஐ.டி.யினருக்கு உத்தரவிடுமாறு கோரி சட்டத்தரணி ஒருவர் கோட்டை நீதிவான் நீதிமன்றில் இன்று (13) ; முறைப்பாடொன்றினை செய்துள்ளார்.

சட்டத்தரணி சேனக பெரேராவே  1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின் 136 (1) ( அ) அத்தியாயத்தின் கீழ் தனிப்பட்ட  மனுவாக ( ப்ரிவடெ ப்லைன்ட்) இதனை இவ்வாறு தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ; முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிசாந்த ; பாராளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன, ; மொறட்டுவை நகர சபை தலைவர் சமன் லால் பெர்னாண்டோ, மேல் மாகாண ; சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன ஆகியோரை கைது செய்ய உத்தரவிடுமாறு கோரியே ; இம்முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.