மிருசுவில் பொதுமக்களை கொலை சம்பவம் – குற்றவாளியின் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

298 0

யாழ்ப்பாணம் – மிருசுவில் பிரசேத்தில் 8 தமிழ் பொதுமக்களை கொலை செய்த சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இராணுவ வீரரான சுனில் ரத்நாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மீள்திருத்தப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

உயர் நீதிமன்றம் இன்று இதனை அறிவித்தது.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதியரசர் புவனேக அலுவிஹாரே உள்ளிட்ட ஐவர் அடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில் இன்று ஆராயப்பட்டது.

இதற்கமைய எதிர்வரும் ஜூலை மாதம் 5, 6, 7, 12, 13, மற்றும் 14 ஆகிய தினங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யாழப்பாணம் மிருசுவில் பகுதியில் எட்டு பொதுமக்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் அப்போதைய இராணுவ செயற்பாடுகளில் ஈடுபட்டடிருந்த சுனில் ரத்நாயக்கவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தமை குறிப்பிடத்தக்கது.