கருணாவின் பிணை நிபந்தனையில் தளர்வு

285 0

வாகன மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள கருணா அம்மான் என அறியப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்;த்தி முரளிதரனின் பிணை நிபந்தனை தளர்த்தப்பட்டது.

கருணா அம்மானின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு அமைய கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார்.

ஒவ்வொரு வாரமும் காவல்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவில் கருணா அம்மான் முன்னிலையாகுமாறு, அவருக்கு பிணை வழங்கும் போது நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

எனினும்; பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையில் இந்த நிபந்தனையை தளர்த்துமாறு அவரது சட்டத்தரணியால் கோரப்பட்டது.

இதன்படி இந்த நிபந்தனையானது, ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும், காவல்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகும் வகையில் தளர்த்தப்பட்டுள்ளது.