தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயற்சிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், உலக தமிழர் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் வைத்து சுமந்திரனை கொலை செய்வதற்கான முயற்சி எடுக்கப்பட்டதாகவும், புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த முயற்சி தொடர்பில் தாங்கள் அதிர்ச்சி அடைவதாக உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
இந்த கொலை முயற்சியை தக்க ரீதியாக அறிந்து முறியடிக்க உதவிய அனைத்து தரப்பினருக்கு நன்றி கூறுவதாகவும் உலக தமிழர் பேரவையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.