பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமனம்

312 0

பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து நியமனத்தைப் பெற்றுக் கொண்டார்.

இவர் கடந்த 2015 – 2019 வரையான நல்லாட்சி காலப்பகுதியில் பிரதமரின் செயலாளராக செயற்பட்டுள்ளார். சமன் ஏகநாயக்க இலங்கை நிர்வாக சேவையில் சிறப்பு தர ஓய்வு பெற்ற அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.