பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் எடுக்கவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நாளை (11) நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் குறித்து கலந்துரையாடுவதே இதன் நோக்கமாகும் என சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.
>இதேவேளை, கடந்த 6 ஆம் திகதி சபாநாயகரினால் பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 17 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.
இதேவேளை, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பதவி விலகல் காரணமாக புதிய பிரதமரை தெரிவு செய்யும் பொறுப்பு நாடாளுமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாளை (11) முற்பகல் 10 மணிக்கு கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுததுள்ளதாகவும் தற்போதைய சூழ்நிலையில், கூட்ட நேரத்தில் மாற்றம் ஏற்படலாம் எனவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.