அநுராதபுரத்தில் பௌத்த மத வழிபாட்டுத்தலம் ஒன்றை நடத்தி வரும் ´ஞானக்கா´ என்ற பெண்ணின் வீடும் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆத்திரமடைந்த மக்கள் அவரது வீட்டிற்குள் செல்ல முடியாத நிலையில் சுவரை உடைத்து வீட்டினுள் நுழைந்து தீ வைத்து எரித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கற்களால் தாக்கப்பட்டதில், வீட்டின் கண்ணாடிகள் அனைத்தும் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் ஞானக்காவின் கண்காணிப்பில் உள்ள பௌத்த மத வழிபாட்டுத்தலம் மீது தாக்குதல் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அது தடுக்கப்பட்டுள்ளதாகவும் எவ்வாறாயினும் விகாரைக்கு சிறிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.