மஹிந்தவின் குருணாகல் இல்லம் முற்றாக தீக்கிரை – விமல், பந்துல, கெஹலியவின் வீடுகள் மீதும் தாக்குதல்

158 0

கொழும்பு, காலிமுகத்திடலை அண்மித்து ‘கோட்டா கோ கம’, ‘மைனா கோ கம’ அமைதிப்போராட்டங்கள் மீது ஆளுங்கட்சி ஆதரவு வன்முறைக் கும்பல் நடாத்திய மூர்க்கத்தனமான தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் பதற்றநிலை தோன்றியுள்ளது.

;இதனைவிட, அண்மையில் அரசாங்கத்திலிருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின், ஹோகந்தர பகுதியில் அமைந்துள்ள வீட்டின் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது

இதனைவிட முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தனவின் இல்லம்,  முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் கண்டி இல்லம் ஆகியனவும் ஆர்ப்பாட்டக்காரர்களின்  தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதுடன் அவ்வீடுகளும் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன.