பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் வீடுகள், வாகனங்கள் தீக்கிரை

256 0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் வாகனங்கள் மற்றும் வீடுகள் போராட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்டுள்ளன.

நாட்டில் இன்று காலை முதல் காலிமுகத்திடல் மற்றும் அலரிமாலிகை உள்ளிட்ட பல பகுதிகளில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன.

அந்த வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், வாகனங்கள் மற்றும் அலுவலகங்கள் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்டும், தீ வைக்கப்பட்டும் வருகின்றது

அந்த வகையில் முன்னாள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோவின் குருநாகலிலுள்ள கட்சி அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.