சிதறிய மூளையின் அணுக்கள் தேடிவரும் !அகரப்பாவலன்.

233 0

” மரணம் ”
பிறந்தவுடன் முடிவான ஒன்று ..
வாழ்வின் பயணம்
மரணத்தை நோக்கியதே !

நாம் எதை விட்டுச் செல்கின்றோம்
என்பதே வாழ்வின் அர்த்தமாகிறது ..

வன்னிக்குச் செய்தி வருகிறது ..
சிங்கள ராணுவத்தின்
பெற்றோர்களின் மனுக்கடிதம் ..
தங்கள் பிள்ளைகளை விடுவிக்கும்படி
கண்ணீரில் எழுதிய கடிதம் ..

நம் தலைவர்
இனவெறி பிடித்தவருமல்ல ..
மனிதாபிமானம் அற்றவருமல்ல  ..
தாய்மாரின் குமுறலும்
சிங்கள குடும்பத்தாரின் ஏக்கமும்
அவர் மனதை வருடுகிறது ..

மனிதாபிமானம்
மேலோங்குகிறது ..
சிங்களக் கைதிகளும் ,
பெற்றோர்களும் ,
தலைவரை வணங்கி
விடைபெறுகின்றனர் ..

ஆம் !

நம் தலைவர்
அற்புதத் தலைவராவார் ..

ஆனால் !
சிங்கள அரசின்
ராஜபஷ்சாக்களின்
போர்வெறி,இனவெறிக்கு
ஓர் எடுத்துக்காட்டு ..

சுற்றிவளைத்த  போது
அகப்பட்ட அப்பாவித் தமிழர்களை
அழைத்துச் செல்கின்றனர் ..
அத்தனை பேரையும்
கண்களை கட்டி
வரிசைப் படுத்துகின்றனர் ..

அந்த வேளையில்
அவர்கள் மனம்
எப்படி துடித்திருக்கும் ..
என்ன நடக்கப்போகிறது ..!
என்பது புரியாத நிலை ..

அது மான் வேட்டையல்ல
மனிதவேட்டை நடந்தேறியது ..
தலை சிதறுகிறது !
உயிர் பிரிகிறது !
இதற்கு அவர்கள் வைத்த பெயர்
“பயங்கரவாதிகளை சுட்டோம் ”
உலகமும் சரியெனத் தலையாட்டியது ..

காட்டுமிராண்டிகளிடம்
என்ன குணம்
மேலோங்கி நிற்கும் ?
மனிதாபிமானமா ?

சிதறிய முளைகளின் அணுக்கள்
மாறுபட்ட வடிவில்
தேடி வரும் ..மாற்றமே
மாறாதது என்றால் !
அணுக்களின் மாற்றமும்
சக்தியாய் வருவது
சாத்தியமே !

மரித்தவர்களின் வாழ்வு
அர்த்தமாகிறது ..
அவர்கள் விட்டுச் செல்லவது ..
தமிழீழப் போரின்
தொடர் பயணமாகும் .

-அகரப்பாவலன்-