நாட்டின் பல பகுதிகளில் இன்னும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால், எரிபொருளை வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.
நாவல – கொஸ்வத்த வீதியை ராஜகிரிய பிரதேசத்தில் மறித்து மக்கள் இன்று (09) காலை போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
இதேவேளை, தமக்கு 8 நாட்களாக எரிவாயு கிடைக்கப்பெறவில்லை என்பதால் நேற்று (08) முதல் கொம்பனி வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.