பெப்ரல் அமைப்பின் அறிவிப்பு

277 0

அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவது  தற்போதைய நெருக்கடி நிலைமைகளுக்குத் தீர்வாகாது என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

மக்களின் உயிரைப் பாதுகாப்பதனையே முதன்மைப் பொறுப்பாகக் கொண்ட அரசாங்கம் அண்மைக்காலமாக பொறுப்பற்ற தீர்மானங்களையே மேற்கொண்டுள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், குறித்த தீர்மானங்களின் ஊடாக நாட்டில் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை உருவாக்கி,  அடக்குமுறைச் சட்டங்களை கொண்டுவருவது கேலிக்கூத்தானது என தாம் நம்புவதாகவும் பெப்ரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது