கொழும்பு, ஆமர் வீதியில் 100 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மாயமான சம்பவத்துடன் தொடர்புடைய சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
எரிவாயு கோரி நேற்று (07) போராட்டம் நடத்தப்பட்டிருந்த நிலையில், அப்பகுதிக்கு எரிவாயு சிலிண்டர்கள் லொறியின் ஊடாக இன்று (08) கொண்டு வரப்பட்டிருந்தது.
இந்நிலையில், மக்கள் கூட்டம் அதிகரித்ததையடுத்து லொறியிலிருந்த 100 சிலிண்டர்கள் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.