மன்னாரிலிருந்து இந்தியா செல்ல முயன்ற கைக்குழந்தை உட்பட 12 பேர் கைது – சரீரப்பிணையில் செல்ல அனுமதி

231 0

மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு படகில் கை குழந்தையுடன் சென்ற இளம் குடும்பம் உட்பட ; 12 பேரை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்று சனிக்கிழமை (4) அதிகாலை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மன்னார் மடு தேக்கம் பகுதியை சேர்ந்த பத்து மாத கைக்குழந்தையுடன் இளம் குடும்பத்தினரையும், பேசாலை பகுதியை சேர்ந்த 7 பேரை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்தும், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு பெண்கள் சட்டவிரோதமாக படகில் இலங்கைக்கு சொந்தமான தீடை பகுதியில் இறக்கி விடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 12 பேரும் நேற்று சனிக்கிழமை (08) ;மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி  முன்னிலையில் பகல் 3 மணியளவில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது வழக்கை விசாரித்த நீதவான் நீதிமன்ற நீதிபதி   இரு சிறுவர்களையும் பொற்றோரிடம் ஒப்படைக்குமாறு ஏனைய 10 பேரையும் சுமார் 50.000 ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.