உடுமலை மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.17.18 லட்சம் பக்தர்கள் காணிக்கை

269 0

தேர்த்திருவிழாவை முன்னிட்டு 10 தற்காலிக உண்டியல்கள் அமைக்கப்பட்டிருந்தன.

உடுமலையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் இரு ஆண்டுக்கு பின், தேர்த்திருவிழா கடந்த மாதம் நடந்தது.
இக்கோவிலில், பக்தர்கள் காணிக்கை செலுத்த 4 நிரந்தர உண்டியல்கள் உள்ளன. தேர்த்திருவிழாவை முன்னிட்டு 10 தற்காலிக உண்டியல்கள் அமைக்கப்பட்டிருந்தன.

உண்டியல்கள் திறந்து, காணிக்கை எண்ணும் பணி நடந்தது. உதவி ஆணையர் செல்வராஜ், ஆய்வர் புவனேஸ்வரி, அறங்காவலர் ஸ்ரீதர், செயல் அலுவலர் சீனிவாசன் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.
நிரந்தர உண்டியலில் 13 லட்சத்து 8 ஆயிரத்து 355 ரூபாயும், தற்காலிக உண்டியல்களில் 4 லட்சத்து 9 ஆயிரத்து 772 ரூபாய் என 2 வகை உண்டியல்கள் வழியாக 17 லட்சத்து, 18 ஆயிரத்து 127 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
மேலும் உண்டியல்களில் 86 கிராம் தங்கம், 295 கிராம் வெள்ளி மற்றும் கண்ணடக்கம் உள்ளிட்ட வேண்டுதல் நிறைவேற்ற 1,500 கிராம் தகடுகளையும் உண்டியலில் செலுத்தியிருந்தனர்.