குறித்த பூசகருக்கு கிடைக்கும் நாளாந்த வருமானமும் மாத வேதனமுமாக 25 ஆயிரத்தையும் தனது பையில் வைத்துக்கொண்டு மீசாலை பிள்ளையார் ஆலயத்திற்கு மோட்டார் சைக்கிளில் வருகை தந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, ஆலயத் திறப்பை எடுத்த வேளை, ஓர் இளைஞர் கைப் பையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடியுள்ளார்.
இது தொடர்பில் பூசகரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.