தற்போதைய நெருக்கடி சூழ் நிலையில், பிரதமர் பதவியை ஏற்குமாறு எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
இந் நிலையில் அது தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சனிக்கிழமை (7) ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டத்தை நடாத்தி ஆலோசனை கோரியுள்ள நிலையில், ; ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இராஜினாமா செய்வாராயின், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், முன்வைத்த 13 அம்ச ஆலோசனைக் கோவையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள தேசிய வேலைத்திட்டத்தை நடை முறைப்படுத்த அரசாங்கத்துடன் பேச இதன்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (6) இடம்பெற்ற விஷேட அமைச்சரவைக் கூட்டத்தை தொடர்ந்து, இன்று (7) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு தொலைபேசியில் அழைத்து பிரதமர் பதவியை ஏற்க அழைப்பு விடுத்துள்ளார்.