போராட்டங்களின் போது சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் கண்டனத்திற்குரியவை – யுனிசெஃப் |

200 0

போராட்டங்களின் போது சிறுவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறைகளை கடுமையாக கண்டிப்பதாக யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை (6) இரவு பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட போது சிறுவர்களும் பாதிப்பிற்குள்ளாகியமை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவ் அமைப்பு இவ்வாறு கண்டனம் வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சிறுவர்கள் சம்பந்தப்பட்ட போராட்டங்களின் போது வன்முறை பற்றிய அறிக்கைகள் குறித்து யுனிசெஃப் அக்கறை கொண்டுள்ளது.

சிறுவர்கள் உட்பர அனைத்து தரப்பினரதும் அமைதியான ஒன்றுகூடல்கள் மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு உத்தரவாதமளிக்கப்பட வேண்டும்.

சிறுவர் உரிமைகள் தொடர்பான மாநாட்டின் படி, சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களை பாதிக்கும் பிரச்சினைகளில் பங்கேற்கவும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் உரிமை உண்டு.

சிறுவர்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மத்திய மற்றும் உள்ளுர் அமைப்புக்களுக்கும்  குடும்பங்களுக்கும் பகிரப்பட்ட பொறுப்புக்கள் உள்ளன.

அனைத்து வன்முறைச் செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். வயதில் மூத்த ஒவ்வொருவரும்  பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

போராட்டங்கள் உட்பட அனைத்து வகையான வன்முறைகளின் போதும் சிறுவர்களை உள்ளீர்ப்பதைத்  தவிர்க்க வேண்டும்.

இதன் போது அதிகாரத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், சிறுவர்களின் பாதுகாப்பிற்கான அடிப்படை உத்தரவாதங்கள் எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் பொருந்தும் என்பதை உறுதிப்படுத்தவும் சட்ட அமலாக்க முறைமைகள் வலுப்படுத்தப்பட வேண்டும்.