தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரை நீக்கிய வழக்கு – மீண்டும் இடைக்கால தடை உத்தரவு

172 0

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் வாலிபர் முன்னணியின் இணை பொருளாளரும் ஆகிய அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளம்செழியன் கட்சியில் இருந்து நீக்கியமை தொடர்பான வழக்கு மீண்டும் நேற்று ; 06.05 2022 விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோது தொடர்ந்தும் 20.05.2022 வரை இடைக்கால தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இவ் வழக்கு விசாரணையானது யாழ். மாவட்டநீதிமன்றில்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக்கட்சி வாலிபர் அணி பொருளாளரும் , மத்தியகுழு உறுப்பினருமான பீற்றர் இளம்செழியன் தம்மை கட்சியில் இருந்து, இலங்கை தமிழரசு கட்சி பதில் பொது செயலாளர் வைத்தியர் ப. சத்தியலிங்கம் நீக்கியது தவறு என யாழ். மாவட்ட நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தார்

அவரின் மனுவிற்கு ஆதரவாக சட்டத்தரணி கலாநிதி குருபரன் முன்னிலையாகியிருந்தார்.
<p>சம்மந்தப்பட்ட இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பதில் பொது செயலாளர் ப. சத்தியலிங்கம் ஆகியோர் நீதிமன்றில் பிரசன்னமாகவில்லை.

நிர்வாக செயலாளர் சூ. சேவியர் குலநாயகம் மட்டும் நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்தார். பூரண விளக்கம் வழங்கும் பொருட்டு நேற்று (06) இருந்து எதிர்வரும் 20.05.2022 ம் திகதி வரை சந்தர்ப்பம் வழங்கப்பட்டு மீண்டும் இடைக்கால தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

பிரதிவாதிகளாக இலங்கை தமிழரசு கட்சி பதில் பொதுச்செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கம், இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா, நிர்வாக செயலாளர் குலநாயகம் ஆகியோரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.<